இயேசு ராஜா வந்திருக்கிறார்

எல்லோரும் கொண்டாடுவோம்

கைதட்டி நாம் பாடுவோம்

 

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்

கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

 

1.

கூப்பிடு நீ பதில் கொடுப்பார்

குறைகளெல்லாம் நிறைவாக்குவார்

உண்மையாக தேடுவோரின்

உள்ளத்தில் வந்திடுவார் – கொண்டாடுவோம் –

 

2.

மனதுருக்கம் உடையவரே

மன்னிப்பதில் வள்ளலவர்

உன் நினைவாய் இருக்கின்றார்

ஓடிவா என் மகனே (ளே)- கொண்டாடுவோம் –

 

3.

கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்

கரம் பிடித்து நடத்திடுவார்

எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்

இன்றே நிறைவேற்றுவார் – கொண்டாடுவோம் –

 

4.

நோய்களெல்லாம் நீக்கிடுவார்

நொடிப்பொழுதே சுகம் தருவார்

பேய்களெல்லாம் நடுநடுங்கும்

பெரியவர் திரு முன்னே – நம்ம‌ – கொண்டாடுவோம் –

 

5.

பாவமெல்லாம் போக்கிடுவார்

பயங்களெல்லாம் நீக்கிடுவார்

ஆவியினால் நிரப்பிடுவார்

அதிசயம் செய்திடுவார் – கொண்டாடுவோம் –

 

6.

கசையடிகள் உனக்காக

காயமெல்லாம் உனக்காக‌

திரு இரத்தம் உனக்காக‌

திருந்திடு என் மகனே – கொண்டாடுவோம் –

 

 



iyesu rajaா vanththirukkirar

ellorum kondaduvom

kaidhaddi nam baduvom

 

kondaduvom kondaduvom

kavalaikal maranththu nam baduvom

 

1.

kubbidu ni pathil kodubbar

kuraikalellam niraivakkuvar

unmaiyaka theduvorin

ullaththil vanththiduvar – kondaduvom –

 

2.

manathurukkam udaiyavare

mannibpathil vallalavar

un ninaivay irukkinrar

oodiva en makane (le)- kondaduvom –

 

3.

kannirellam thudaiththiduvar

karam bidiththu nataththiduvar

ennamellam eekkamellam

inre niraiverruvar – kondaduvom –

 

4.

noykalellam nikkiduvar

nodibbozuthe sukam dharuvar

beykalellam nadu nadungkum

beriyavar thiru munne – namma‌ – kondaduvom –

 

5.

bavamellam bokkiduvar

payangkalellam nikkiduvar

aaviyinal nirabbiduvar

athichayam seythiduvar – kondaduvom –

 

6.

kasaiyadikal unakkaka

kayamellam unakkaka‌

thiru irathdham unakkaka‌

thirunththidu en makane – kondaduvom –